நன்றி ! மீண்டும் பார்க்க!....

     நுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை கண்ணுக்குப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும், பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.
      கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், நுண் பூஞ்சைகள், நுண்பாசிகள் ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்.
   நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம். நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.
Copywrite @2016 ENVIS Centre !  All rights reserved  This site optimized for 1250 x 2000 Screen resolution        தனியுரிமை | நிபந்தனைகள்
அறிமுகம்


HIT COUNT